என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மராட்டியத்தை மிரட்டும் கொரோனா.. ஒரே நாளில் 28 பேருக்கு பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 153 ஆனது
- ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதி.
- மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 81,72,163 ஆக அதிகரிப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (டிசம்பர் 25) மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இன்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 28 பேரில் ஒருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்படவில்லை. புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையுடன், அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 72 ஆயிரத்து 163 ஆக அதிகரித்து இருக்கிறது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
"மாநிலத்தில் இதுவரை 153 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 142 பேர் வீட்டில் இருந்தபடி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். 11 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மட்டும் ஐ.சி.யு.-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்," என்று சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.