search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    90 சதவீத இடங்களில் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிரான எதிர்ப்பை சமாளித்து வெற்றி கண்டுள்ளோம்: சஞ்சய் ராவத்
    X

    90 சதவீத இடங்களில் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிரான எதிர்ப்பை சமாளித்து வெற்றி கண்டுள்ளோம்: சஞ்சய் ராவத்

    • கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து மனுதாக்கல்.
    • கட்சியில் உள்ள எதிர்ப்பாளர்களை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொள்வோம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. என்ற போதிலும் மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாடி ஆகிய இரண்டு கூட்டணிகளில் உள்ள கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடுகின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை.

    மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

    இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதிகளை பங்கீடு செய்வதில் மிகப்பெரிய இழுபறி நீடித்தது. தொகுதி பங்கீடு முடிவடைந்ததாலும், அந்த தொகுதியில் உள்ள கட்சி தலைவர்கள் இந்த தொகுதியை எப்படி கூட்டணிக்கு கட்சிக்கு விட்டுக்கொடுக்கலாம். நாங்கள் இங்கே போட்டியிடுவோம் என எதிர்த்து தெரிவித்த சம்பவங்கள் நடைபெற்றன.

    இதெல்லாம் சமாளிக்கப்பட்டு வேட்புமனுதாக்கல் முடிவடைந்துள்ளது. இருந்த போதிலும் பலர் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் மகா விகாஸ் கூட்டணியில் 90 சதவீத இடங்களில் இதுபோன்ற எதிர்ப்பாளர்களை சமாதானம் செய்து வெற்றி பெற்றுள்ளோம் என சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்ச ராவத் கூறுகையில் "கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவதாக தெரிவித்த எதிர்ப்பாளர்களை 90 சதவீத இடங்களில் சமாதானம் செய்துவிட்டோம். தேர்தலில் இதுபோன்றவை கூட்டணியில் நடக்கத்தான் செய்யும். எதிர்ப்பாளர்களை சமாதானம் செய்ய நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். நாங்கள் மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறோம். மாற்றம் கொண்டு வர ஒவ்வொருவரும் இணைய வேண்டும்" என்றார்.

    வேட்புமனுவை திரும்பப் பெற நவம்பர் 4-ந்தேதி கடைசி நாளாகும்.

    Next Story
    ×