என் மலர்
இந்தியா
மகாராஷ்டிர கலவரம்: தலித் செயல்பாட்டாளர் லாக் அப் மரணம்.. போலீஸ் சித்ரவதை அம்பலம்
- போராட்டங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ட்டனர்.
- சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி [Parbhani] நகரில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரெயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பு பிரதியை எரிதத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.
பகுஜன் அகாடி (VBA) கட்சியினர் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு கலவரத்தில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்தியதாக [vandalism] 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 35 வயதான பகுஜன் அகாடி (VBA) தலித் செயல்பாட்டாளர் சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷி என்பவரும் அடங்குவார். பர்பானி மாவட்ட மத்திய சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 15 [ஞாயிற்றுக்கிழமை] காலையில் அவர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக சூர்யவன்ஷி உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் சூர்யவன்ஷியின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்ரபதி சாம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வீடியோ பதிவுடன் நடத்தப்பட்ட அவரது பிரதேச பரிசோதனையில் சூர்யவன்ஷியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்த காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் உயிர் பிரிந்துள்ளது என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். எனவே போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உயிரிழந்தது உறுதியான நிலையில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது.
நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, படிப்பு செலவுக்காக சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தவர். இவரது சகோதரரும் தாயும் புனேவில் உள்ள சாக்கனில் கூலி வேலை செய்து வந்தனர்.
பகுஜன் அகாடி கட்சியுடன் இணைந்து உள்ளூர் செயல்பாட்டாளராக சூர்யவன்ஷி இருந்துள்ளார்.இந்நிலையில் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர்.
பின்னர், அவரது உடலை பர்பானிக்கு கொண்டு வருவதற்கு பதிலாக லத்தூரில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். ஆனால் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்பால் போலீஸ் பின்வாங்கியுள்ளது.
The custodial death of Somnath Suryawanshi — a Bhim Sainik belonging to the Wadar community — in Parbhani is gut wrenching, sickening and intolerable to say the least.What is more intolerable that his death happened in judicial custody despite his bail application being…
— Prakash Ambedkar (@Prksh_Ambedkar) December 15, 2024
காவல்துறை வேண்டுமென்றே தலித் குடிசைகளுக்குள் நுழைந்து சொத்துக்களை அழிப்பதை உள்ளூர் வாசிகளால் பதிவுசெய்யப்பட்ட பல வீடியோக்கள் காட்டுகிறது.
பர்பானிக்கு மாவட்டத்தில் தலித்-பகுஜன் அம்பேத்கரிய இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் அளவை சூர்யவன்ஷியின் மரணம் எடுத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முற்றிலும் தோற்றுப் போயுள்ளார் என்று உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.