என் மலர்
இந்தியா
அஜித் பவாருக்கு மட்டுமே நிதித்துறையை கையாளும் திறன் உள்ளது: என்.சி.பி. செய்தி தொடர்பாளர்
- மந்திரி சபையில் 43 பேர் இடம் பெற வாய்ப்பு.
- பா.ஜ.க. 22 மந்திரிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சி கூட்டணிகளான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.-வை சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகியோர் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளனர்.
பதவி ஏற்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இலாகாக்களும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.
முதல்வரான பட்நாவிஸிடம் நிதியமைச்சர் இலாகா இருக்க வேண்டும் என பா.ஜ.க. விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் அஜித் பவார் நிதி இலாகாவை குறிவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.எல்.சி.-யுமான மிட்கரி "அஜித் பவாருக்கு மட்டுமே நிதித்துறையை கையாளும் திறன் உள்ளது. 10 முறை பட்ஜெட் தாக்குதல் செய்துள்ள அவருக்கு, நிதியை ஒவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பது தெரியும்.
அஜித் பவாரை நிதியமைச்சராக ஆக்கவில்லை என்றால், இந்த அரசுக்கு (மகாயுதி) பயனுள்ளதாக இருக்காது" என்றார்.
14-ந்தேதி (நாளைமறுநாள்) கேபினட் விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக முதல்வருடன் சேர்த்து 43 மந்திரிகள் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும், பா.ஜ.க. 21 முதல் 22 இடங்களை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.