search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டாக்டர்களை தேநீர் அருந்த அழைத்த மம்தா பானர்ஜி: பேச்சு வார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை
    X

    டாக்டர்களை தேநீர் அருந்த அழைத்த மம்தா பானர்ஜி: பேச்சு வார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை

    • கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து கிளம்பிச் சென்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு நீதி கேட்டு பயிற்சி டாக்டர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பயிற்சி டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்காள அரசு அழைப்பு விடுத்தது. ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

    ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

    இதற்கிடையே முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்று மம்தாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

    இதையடுத்து இரவில் போராடி வரும் டாக்டர்கள், மம்தா பானர்ஜியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், சந்திப்பை நேரலையாக பதிவு செய்வதை ஏற்காததால் அவர்கள் மம்தா வீட்டுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காத்திருந்தனர்.

    தனது வீட்டு வாசல் வரை வந்த டாக்டர்கள் பிரதிநிதிகள் உள்ளே வராமல் அங்கேயே மழையில் நனைந்தபடி நின்றதைப் பார்த்த மம்தா, தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் உள்துறைச் செயலர் என அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்.

    நீங்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை வழங்கி உள்ளோம். நீங்கள் என்னுடன் பேச விரும்பவில்லை என்றால் தயவு செய்து உள்ளே வாருங்கள். தேநீர் அருந்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன்.

    நமது சந்திப்பை நிச்சயம் வீடியோ பதிவு செய்ய நான் உறுதியளிக்கிறேன், பாதுகாப்பு காரணங்ளால் நேரலை செய்ய முடியாது என்றார்.

    வீடியோ பதிவு செய்வதை ஏற்காததால் பயிற்சி டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதைத்தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுகிறது.

    Next Story
    ×