என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
'மம்தா என்னை சீண்டவோ பயமுறுத்தவோ முடியாது'.. எச்சரித்த ஆளுநர் - மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?
- கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
- எனது கேரக்டருக்கு மம்தா போன்ற ஒருவர் களங்கம் விளைவிக்க முடியாது.
கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 27 இல் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்' என்று பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மம்தா மீதும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் தற்போது மம்தாவின் கருத்து குறித்து பேசியுள்ள ஆனந்தா போஸ், மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் மம்தாவை நான் மதிக்கிறேன்.அதுபோல மம்தாவும் நாகரீகமான முறையில் பேச வேண்டியது அவசியம். யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார்.
எனது கேரக்டருக்கு மம்தா போன்ற ஒருவர் களங்கம் விளைவிக்க முடியாது. எனது சுய மரியாதையில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மம்தா என்னை சீண்டவோ பயமுறுத்தவே முடியாது. அந்த அளவுக்கு அவர் வளரவில்லை.
ஒரு முதலமைச்சராக சட்டப்படி என்னை அவர் எதிர்க்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைக் குறித்து பொய்களைப் பரப்பி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் மம்தா மேனியாவை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மம்தா என்ற தனி நபர் மீதே அவதூறு வழக்கு தொடர்ந்தேன். அந்த தனி நபர் முதலமைச்சராக உள்ளார் அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார்.