search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிகரெட் துண்டுகள் மூலம் பொம்மை தயாரிப்பு- வீடியோ வைரல்
    X

    சிகரெட் துண்டுகள் மூலம் பொம்மை தயாரிப்பு- வீடியோ வைரல்

    • துண்டுகளில் இருந்து பஞ்சுகளை மட்டும் தனியாக பிரித்தெடுக்கிறார்கள்.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் சிலர், இந்த பொம்மைகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என பதிவிட்டனர்.

    புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்பதால் புகைப்பழக்கத்திற்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த நபன்குப்தா என்பவர் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்து அதன் மூலம் பொம்மைகள் தயாரிக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோ 60 வினாடிகள் உள்ளது. அதில், ஏராளமான சிகரெட் துண்டுகளை ஒரு சாக்கு பையில் அடைக்கப்பட்டுள்ளது. அந்த துண்டுகளில் இருந்து பஞ்சுகளை மட்டும் தனியாக பிரித்தெடுக்கிறார்கள். பின்னர் அந்த பஞ்சுகளை மறுசுழற்சி செய்வது குறித்த விளக்கத்தை குப்தா விளக்குகிறார்.

    தொடர்ந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சுகளை பொம்மைகளுக்குள் அடைத்து விதவிதமான வண்ணங்களில் பொம்மைகள் தயாரிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் சிலர், இந்த பொம்மைகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என பதிவிட்டனர். அதே நேரம் சில பயனர்கள், மறுசுழற்சி செய்யப்பட்டு தான் அவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே குப்தாவின் முயற்சியை கேலி செய்ய வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.



    Next Story
    ×