search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆம் ஆத்மியும், காங்கிரசும் கூட்டுக் களவாணிகள்: பா.ஜ.க. கடும் தாக்கு
    X

    ஆம் ஆத்மியும், காங்கிரசும் கூட்டுக் களவாணிகள்: பா.ஜ.க. கடும் தாக்கு

    • பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையில் இன்று தொகுதி பங்கீடு முடிவானது.
    • ராகுலுடன் கெஜ்ரிவால் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதால் காங்கிரஸ் கட்சியினர் வருத்தத்தில் உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையில் தொகுதி பங்கீடு இன்று முடிவானது. டெல்லி, குஜராத், அரியானா, கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டியிடும் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டன.

    இந்நிலையில், டெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதி பா.ஜ.க. எம்.பி.மனோஜ் திவாரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருடனும் திருடனும் சகோதரர்களே என நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுதான் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே நடந்துள்ளது.

    காங்கிரஸ் தலைவர்களை சிறையில் அடைப்பேன் எனக்கூறி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது அவர்களின் காலடியில் விழுந்து கிடப்பதால் ஆம் ஆத்மி கட்சியினர் வருத்தம் அடைந்துள்ளனர்.

    அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, இன்று ராகுல் காந்தியுடன் கெஜ்ரிவால் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதால் காங்கிரஸ் கட்சியினரும் வருத்தத்தில் உள்ளனர்.

    பா.ஜ.க.வும் நரேந்திர மோடியும் மக்கள் அனைவரின் இதயத்திலும் உள்ளனர். இனி டெல்லி மக்கள் அனைத்தையும் முடிவுசெய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×