என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![மேயர் தேர்தல் மோசடி: சண்டிகரில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் மேயர் தேர்தல் மோசடி: சண்டிகரில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2024/01/31/2005831-arrested.webp)
மேயர் தேர்தல் மோசடி: சண்டிகரில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 12 வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்தார்.
- மேயர் தேர்தல் மோசடியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேயர் அலுவலகம் முன்பு இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சண்டிகர்:
சண்டிகர் மாநகராட்சி மன்ற மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரசும் ஆம்ஆத்மி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டன.
இத்தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன. மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவு ஆகின. இதில் இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதனால் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
12 வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்தார். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்தனர்.
மேயர் தேர்தலில் பாஜக மோசடி செய்து, வெற்றி பெற்றுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சண்டிகர் உயர்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி கட்சி அணுகி உள்ளது.
இந்நிலையில் மேயர் தேர்தல் மோசடியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேயர் அலுவலகம் முன்பு இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேயர் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை கைது செய்தனர்.
#WATCH | Chandigarh: Members of Youth Congress protest outside Mayor Office over Chandigarh Mayoral Election. Police detained the protestors. pic.twitter.com/gsZ0X64oh1
— ANI (@ANI) January 31, 2024