என் மலர்tooltip icon

    சண்டிகர்

    • பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
    • 73 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் நேற்று நடந்த 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூரு அணி 18.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் 50+ ரன்கள் அடிப்பது விராட் கோலிக்கு இது 67-வது முறையாகும். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் கோலி படைத்தார்.

    இவருக்கு அடுத்து டேவிட் வார்னர் 66 முறையும், ஷிகர் தவான் 53 முறையும், ரோகித் சர்மா 45 முறையும் எடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு சென்று பிரபல பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் தயாரித்தார்.
    • ரீல்சை வலைத்தளத்தில் பதிவிட அது காட்டுத்தீயாக பரவியது.

    சண்டிகரை சேர்ந்தவர் அஜய். போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஜோதி. சமூக வலைத்தளத்தில் 'ரீல்ஸ்' பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    இந்தநிலையில் ஜோதி, சாலை நடுவே ரீல்ஸ் எடுத்து பதிவிட முடிவு செய்தார். அதன்படி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு சென்று பிரபல பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் தயாரித்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து அந்த ரீல்சை வலைத்தளத்தில் பதிவிட அது காட்டுத்தீயாக பரவியது. இதனை தொடர்ந்து மனைவியின் 'ரீல்ஸ்' மோகத்தால் அவருடைய கணவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



    • இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என அறிவோம்.
    • பயிற்சியாளருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். 2025 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:

    வரும் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவே விரும்புகிறேன்.

    இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என்பதை ஏற்கனவே அறிவோம். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும்.

    நான் அதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்த முறை அந்த நிலை குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும். பயிற்சியாளர் என்னை அங்கீகரிக்கும் வரை அந்த எண்ணில் கவனம் செலுத்தப் போகிறேன்.

    நான் அவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் மைதானத்திலும், வெளியேயும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் எப்படி நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

    அவர் அனைவரையும் ஆதரிக்கிறார். சில இடங்களில் சீனியர்-ஜூனியர் கலாசாரம் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் நான் அவருடன் முதல் முறையாகப் பணியாற்றியபோது, நான் ஒரு சிறந்த வீரர் என்ற உணர்வை அவர் எனக்கு ஏற்படுத்தினார்.

    அவருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது. முடிவு இங்கும் அங்கும் சென்றாலும் அவரது மனம் ஊசலாடுவதில்லை. அவர் அதே வழியில் சிந்திக்கிறார். மேலும் அவர் வெற்றி பெற விரும்புகிறார்.

    கோப்பையை வெல்வதே முக்கியம். இதில் எந்த அழுத்தமும் இல்லை. இது ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.

    • சண்டிகரில் மேயர் தேர்தலில் 19 வாக்குகளை பெற்று பாஜக வெற்றி பெற்றுள்ளது.
    • 17 வாக்குகள் மட்டுமே பெற்று ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்துள்ளது.

    சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில் 19 வாக்குகளை பெற்று பாஜக வெற்றி பெற்றுள்ளது. 17 வாக்குகள் மட்டுமே பெற்று ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்துள்ளது.

    ஆம் ஆத்மி வேட்பாளர் பிரேம் லதாவை தோற்க்கடித்து பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா சண்டிகர் மேயராக வெற்றி பெற்றுள்ளார்.

    மேயர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்றத்தால் ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்ஸ்ரீ தாக்கூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

    வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஏனெனில் கடந்தாண்டு நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டு பாஜக வென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பா.ஜ.க அரசு அமைந்துள்ளது.
    • புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தி உள்ளது.

    சண்டிகர்:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மத்தியில் பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப், சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    நமது நாட்டின் குடிமக்களின் லட்சியங்களை புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்ற வழிவகுக்கும்.

    முந்தைய சட்டங்களின் நோக்கம் இந்தியர்களை தண்டிப்பதும், அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும் ஆகும்.

    துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், சுதந்திரம் அடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும், நடைமுறையில் இருந்துள்ளது. குடிமக்களை அடிமைகளாக நினைத்துப் பயன்படுத்தினர். நாம் ஏன் அந்த சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.

    முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் சட்டத்தை மாற்ற நினைக்கவில்லை. காலனித்துவ மனப்பான்மையில் இருந்து வெளி வர வேண்டும் என நினைத்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் இருந்து தீர்மானம் போட்டேன்.

    மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களில் நமது நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    அனைத்து சட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி என தெரிவித்தார்.

    • காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ வைரலானது.
    • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சண்டிகரில் ஓடும் காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கருப்பு நிற ஸ்கார்பியோ காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடித்த வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சண்டிகர் உட்பட வட இந்தியாவின் பல நகரங்களில் தீபாவளியன்று பட்டாசு வெடித்த பின்பு காற்றின் தரம் மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • இவர் தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்.
    • சண்டிகர் விமான நிலையத்தில் நான் மாட்டிக்கொண்டுள்ளேன்.

    இந்தியாவில் சமீப காலமாக விமான சேவைகளின் தரம் குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. வெடிகுண்டு மிரட்டல்களால் விமான நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் இதுபோன்ற விமர்சனங்கள் அந்நிறுவனங்களுக்கு மேலும் அவப்பெயரை உருவாகியுள்ளது.

    அதுவும் பல குற்றச்சாட்டுக்கள் பிரபலங்களால் முன்வைக்கப்படுகிறது. தற்போது இண்டிகோ விமான சேவை குறித்து பாலிவுட் நடிகை ஷமிதா செட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்.

     

    தற்போது தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்ட வீடியோவில் ஷமிதா பேசியதாவது,

    ஜெய்ப்பூரில் இருந்து நிகழ்ச்சி ஒன்றுக்காக நான் சண்டிகாருக்கு இண்டிகோ விமானத்தில் வந்தடைந்தேன்.ஆனால் என்னுடையதும் எனது மேக் அப் ஸ்டைலிஸ்ட் உடைய பைகளை ஜெய்ப்பூரிலேயே எடை தொடர்பான பிரச்சனையால் என்னைக் கேட்காமலேயே விமானத்திலிருந்து இறக்கிவைத்திருக்கின்றனர்.

    இப்போது ஜெய்ப்பூரில் இருந்து அடுத்த விமானம் சண்டிகாருக்கு வரும்போது அதில் எனது பைகளை அனுப்பி வைப்பதாக விமான ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே சண்டிகர் விமான நிலையத்தில் நான் மாட்டிக்கொண்டுள்ளேன். இந்த ஊழியர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. இண்டிகோ, உங்கள் விமானங்களில் பறப்பது என்பது மிகவும் s*** ஆன அனுபவம் ['IndiGo you're a pretty s*** airline to fly on!] என்று கடுமையான சாடியுள்ளார். இந்நிலையில் ஷமிதா செட்டியிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

    • ஓட்டுநரும் நடத்துனரும் அவரை பேருந்தில் ஏற அனுமதிக்க வில்லை.
    • கதவின் அருகே தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் பயணித்துள்ளார்.

    சண்டிகர் நகரில் ஓடும் பேருந்தின் கதவில் தொங்கியபடி ஒருவர் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாதிக்கப்பட்ட நபர் அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியே பேருந்து வந்துள்ளது. ஆனால் ஓட்டுநரும் நடத்துநரும் அவரை பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால் பேருந்தின் கதவின் அருகே தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் பயணித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததன் அடிப்படையில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

    • பிரதமர் மோடி 2029-லும் மீண்டும் வெற்றி பெறுவார் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
    • அப்போதும் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரும் என தெரிவித்தார்.

    சண்டிகர்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சண்டிகரில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    2029-ம் ஆண்டிலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி தயாராக இருக்க வேண்டும்.

    எதிர்க்கட்சியினர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். 2029-ல் பிரதமர் ஆக மோடி மீண்டும் பதவி ஏற்பார்.

    கடந்த 3 தேர்தலிலும் காங்கிரசை விட பா.ஜ.க. கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை.

    எதிர்க்கட்சியினர் நிலையற்ற தன்மையை விரும்புகின்றனர். இதனால்தான் பா.ஜ.க. அரசு நீடிக்காது எனக் கூறிவருகின்றனர்.

    இந்த பதவிக்காலத்தை முழுமையாக பா.ஜ.க. நிறைவு செய்வதுடன், அடுத்து நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொறுப்பான எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும் என அவர்கள் பாடம் படிக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • இரு குடும்பத்தினருக்கு இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளது.
    • இதுதொடர்பாக சமரசம் பேசுவதற்காக சண்டிகர் குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்தனர்.

    சண்டிகர்:

    முன்னாள் போலீஸ் அதிகாரியான மல்விந்தர் சிங் சித்துவுக்கும், அவரது மருமகன் ஹர்பிரித் சிங் குடும்பத்துக்கும் இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

    இரு தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக சமரசம் பேசுவதற்காக சண்டிகர் குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது கழிவறை செல்ல வேண்டும் என மல்விந்தர் சிங் கேட்டுள்ளார். அவருக்கு வழிகாட்ட மருமகன் சென்றுள்ளார்.

    சிறிது நேரத்தில் நீதிமன்றத்தின் உள்ளேயே துப்பாக்கி சுடும் சத்தம் திடீரென கேட்டது.

    மாமனார் மல்விந்தர் சிங், மருமகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 5 குண்டுகள் பாய்ந்து மருமகன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைக் கண்டதும் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

    துணிச்சலான சில வக்கீல்கள் மாமனாரை மடக்கிப் பிடித்து அருகிலுள்ள ஒரு அறையில் வைத்து பூட்டினர். இதுதொடர்பாக போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து மல்விந்தர் சிங்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் மருமகனை மாமனார் சுட்டுக் கொன்ற சம்பவம் சண்டிகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தான் நலமாக உள்ளதாகவும், தன்னுடைய கவலை எல்லாம் பஞ்சாபில் வேகமாக வளர்ந்து வரும் தீவிரவாதத்தைப் பற்றியதே ஆகும் என்று கங்கனா தெரிவித்தார்.
    • கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராடியது தெரிந்தததே. இதற்கிடையில் பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார்.

     

    இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் எம்.பி யாக உள்ள ஒருவரை தாக்கியதர்க்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில் தான் தாக்கப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டிருந்த கங்கனா ரனாவத், தான் நலமாக உள்ளதாகவும், தன்னுடைய கவலை எல்லாம் பஞ்சாபில் வேகமாக வளர்ந்து வரும் தீவிரவாதத்தைப் பற்றியதே ஆகும் என்று தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு நடந்தது குறித்து பாலிவுட் பிரபலங்கள் மௌனம் காப்பது சரியல்ல என்றும் தெரிவித்திருந்தார். 

    • கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
    • காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி.

    சண்டிகர் விமான நிலையத்தில், பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என ஏற்கனவே கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார்.

    இதனால், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ×