search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆங்கிலேய சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்
    X

    ஆங்கிலேய சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பா.ஜ.க அரசு அமைந்துள்ளது.
    • புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தி உள்ளது.

    சண்டிகர்:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மத்தியில் பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப், சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    நமது நாட்டின் குடிமக்களின் லட்சியங்களை புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்ற வழிவகுக்கும்.

    முந்தைய சட்டங்களின் நோக்கம் இந்தியர்களை தண்டிப்பதும், அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும் ஆகும்.

    துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், சுதந்திரம் அடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும், நடைமுறையில் இருந்துள்ளது. குடிமக்களை அடிமைகளாக நினைத்துப் பயன்படுத்தினர். நாம் ஏன் அந்த சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.

    முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் சட்டத்தை மாற்ற நினைக்கவில்லை. காலனித்துவ மனப்பான்மையில் இருந்து வெளி வர வேண்டும் என நினைத்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் இருந்து தீர்மானம் போட்டேன்.

    மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களில் நமது நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    அனைத்து சட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி என தெரிவித்தார்.

    Next Story
    ×