search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறைக்கைதிகள் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
    X

    சிறைக்கைதிகள் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

    • விசாரணைக் கைதிகள் குற்றத்திற்கான தண்டனையில் பாதியளவு அனுபவித்திருந்தால் ஜாமின் வழங்க வேண்டும்.
    • தொடர்புடைய நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகள் கைதிகளை விடுவிக்க அணுக வேண்டும்.

    மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி, அந்தக் குற்றத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சிறைத் தண்டனையில் பாதியை ஏற்கனவே அனுபவித்திருந்தால், அவரை விடுவிக்க வேண்டும் என்பதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் சிறைகளில் கூட்ட நெரிசல் குறையும் எனத் தெரிவித்துள்ளது.

    அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிறைச்சாலை இயக்குநர் ஜெனரல்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) இன் பிரிவு 479-ன் விதிகளின் கீழ், அத்தகைய தகுதியுள்ள கைதிகளை விடுவிக்க சிறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    BNSS-ன் பிரிவு 479, ஒரு நபர் எந்தவொரு சட்டத்தின் கீழும் ஒரு குற்றத்தின் விசாரணை அல்லது விசாரணையின் போது (அந்தச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றமாக குறிப்பிடப்படாத குற்றமாக இருக்கும் பட்சததில்) அந்தக் குற்றத்திற்காகக் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தில் பாதி காலம் வரை காவலில் வைக்கப்பட்டிருந்தால், அவர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறது.

    முதல் முறை குற்றவாளிகள் விஷயத்தில், அந்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு வரை காவலில் இருந்திருந்தால், அத்தகைய கைதிகள் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.

    மேலும், BNSS-ன் பிரிவு 479 (3) மேற்கூறிய விசாரணைக் கைதிகளை ஜாமினில்/பிணையில் விடுவிப்பதற்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு குறிப்பிட்ட பொறுப்பை வழங்குகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 16, 2024 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டதாகவும், தகுதியுள்ள அனைத்து கைதிகளுக்கும் BNSS-ன் பிரிவு 479-ன் விதிகளின் பலனை வழங்கவும், அதன்படி அவர்களின் ஜாமின் விண்ணப்பங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×