search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலியல் புகாரில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலைமறைவு: முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு
    X

    பாலியல் புகாரில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலைமறைவு: முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு

    • எம்எல்ஏவின் முன்ஜாமீன் மனு வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
    • புகாரை வாபஸ் பெற ரூ.30 லட்சம் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எல்தோஸ் மீது திருவனந்தபுரம் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், கோவளம் போலீசில் பாலியல் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக கோவளம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து எல்தோஸ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை போலீசார் விசாரணைக்கு தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

    இதற்கிடையில் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கேட்டு, எல்தோஸ் எம்.எல்.ஏ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

    இந்த நிலையில் புகாரை வாபஸ் பெற, வக்கீல் மூலம் தன்னை எல்தோஸ் அணுகியதாகவும், இதற்காக ரூ.30 லட்சம் பேரம் பேசியதாகவும் தற்போது மற்றொரு குற்றச்சாட்டை ஆசிரியை தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரத்தில் பேட்டியளித்த அவர், 'கடந்த 10 ஆண்டுகளாக எல்தோசுடன் எனக்கு பழக்கம் இருந்தாலும், சில மாதங்களாக தான் நாங்கள் நெருக்கமானோம். அப்போது அவரது நடவடிக்கை பிடிக்காததால் நட்பை துண்டிக்க முயன்றேன்.

    இதனால் அவர் என்னை மிரட்டியதுடன் அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். எனவே தான் போலீசில் புகார் அளித்தேன். இந்தநிலையில் தான் புகாரை வாபஸ் பெறுவதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வக்கீல் அலுவலகத்திற்கு வர வழைத்து ரூ.30 லட்சம் வரை பேரம் பேசினர். ஆனால் நான் ஒத்துக்கொள்ளவில்லை. விரைவில் எல்தோஸ் குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிடுவேன்' என்றார்.

    இதற்கிடையில், புகார் அளித்த பெண், எம்.எல்.ஏ.வின் செல்போனை பறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, எம்எல்ஏவின் மனைவி மரியம்மா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×