என் மலர்
இந்தியா
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள்: உ.பி.யில் 8 தொகுதியில் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு
- உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை வென்றுள்ளது.
- உத்தரபிரதேசத்தில் பாஜக 33 இடங்களையும் வென்றுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.
பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை பெற்றுள்ளதால் ஜூன் 8 ஆம் தேதி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களையும் பாஜக 36 இடங்களையும் வென்றுள்ளது.
இந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 13 சட்டமன்ற உறுப்பினர்களும் 4 சட்டமேலவை உறுப்பினர்களும் போட்டியிட்டனர். அதில் 8 சட்டமனற உறுப்பினர்களும் 1 சட்டமேலவை உறுப்பினரும் வென்று எம்.பி.யாகி உள்ளனர்.
இதனால் விரைவில் உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒருவர் இரண்டு பதிவுகளை வகிக்க முடியாததால் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி எம்.எல்.ஏ பதவியை அவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமாஜ்வாதி எம்எல்ஏக்கள் அகிலேஷ் யாதவ் (கர்ஹால்), ஜியா உர் ரஹ்மான் (குந்தர்கி), லால்ஜி வர்மா (கடேஹாரி) ஆகியோர் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றனர்.
பாஜக எம்எல்ஏக்கள் பிரவீன் படேல் (புல்பூர்), அதுல் கர்க் (காசியாபாத்), அனூப் பிரதான் (கைர்) ஆகியோர் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றனர்.