என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்திய அரசியல் அமைப்பு புத்தகத்தை சாஷ்டாங்கமாக வணங்கிய மோடி - வீடியோ
- பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மத்திய அரங்கில் தொடங்கிய கூட்டத்தில் 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர்.
- இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர்,சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார்
நடந்து முடித்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 இடங்களில் 240 தொகுதிகளை மட்டுமே அந்த கட்சியால் கைப்பற்ற முடிந்தது. அதேநேரம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது.
பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் மோடியே 3-வது முறையாக ஆட்சியமைக்க தங்கள் ஆதரவை அளித்தனர். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.
இதற்கிடையே புதிய மந்திரி சபையில் யார் யாருக்கு இடமளிப்பது குறித்து கட்சி தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.
பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மத்திய அரங்கில் தொடங்கிய கூட்டத்தில் 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மோடி பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்க பழைய பாராளுமன்றத்துக்கு வந்த மோடி அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு நேராக இந்திய அரசியலமைப்பு புத்தகம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று, அதை கையில் எடுத்து நெற்றியில் ஒத்திக்கொண்டார். பின் அதை தலைவணங்கி தொட்டுக் கையெடுத்துக் கும்பிட்டு அதன்பின்னரே தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார்.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர்,சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சிகளாக கருதப்படும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய 2 கட்சிகளும் முறையே 16 மற்றும் 12 எம்.பி.க்களை வைத்திருக்கின்றன. எனவே கூட்டணி ஆட்சியை சுமுகமாக தொடர்வதற்கு இந்த இரு கட்சிகளின் ஆதரவும் பா.ஜ.க.வுக்கு முக்கியமானதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்