என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சிறந்த கட்டுமானத்துக்கு உதாரணம் கல்லணை: பிரதமர் மோடி பெருமிதம்
Byமாலை மலர்4 March 2023 10:55 PM IST
- தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு, இரண்டு மடங்காகி இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
- கல்லணையை சிறந்த உட்கட்டமைப்பிற்கான உதாரணமாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
புதுடெல்லி:
உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, நாட்டின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு எப்போதும் முக்கிய தூணாக இருந்து வருவதாகவும், 2014ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் சராசரி தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு, இரண்டு மடங்காகி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள கல்லணையை சிறந்த உட்கட்டமைப்பிற்கான உதாரணமாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்த அவர், இந்த அணை இன்றளவும் இயங்கி வருவது குறித்து மக்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவார்கள் என்றார். கல்லணை போன்ற ஒரு பழமையான ஒரு அணை இன்றளவும் அப்பகுதிக்கு வளர்ச்சியை வழங்கி வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
Next Story
×