search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஊடகங்களுக்கான சுயபரிசோதனையின் தருணம்: கருத்துக் கணிப்பு குறித்து தேர்தல் ஆணையர் பதில்
    X

    ஊடகங்களுக்கான சுயபரிசோதனையின் தருணம்: கருத்துக் கணிப்பு குறித்து தேர்தல் ஆணையர் பதில்

    • நாங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நிர்வகிக்கவில்லை.
    • மாதிரி அளவு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக சுயபரிசோதனை தேவை.

    ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இழுபறி நீடிக்கும், அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மீடியாக்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.

    ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    அரியானாவில் தொடக்க சுற்றின்போது காங்கிரஸ் 50 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடங்களில் பா.ஜ.க. முன்னிலை பெற ஆரம்பித்தது. பின்னர் 48 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.

    இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ராஜிவ் குமார் பதில் அளித்து கூறியதாவது:-

    நாங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நிர்வகிக்கவில்லை. மாதிரி அளவு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக சுயபரிசோதனை தேவை. சுயபரிசோதனைக்குரிய அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது.

    எதிர்பார்ப்பிற்கும் உண்மைக்கும் இடையிலான இடைவேளி விரக்தியை ஏற்படுத்த வழிவகுக்கும். யாராலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை டிரென்ட் உடன் எதிர்பார்க்க முடியாது.

    அரியானாவில் காலையில் 8.05 அல்லது 8.10-க்கும் முடிவுகள் வெளியாக தொடங்கிவிட்டது. இது அர்த்தமற்றது. வாக்கு எண்ணிக்கை 8.30 மணிக்கு தொடங்கியது. 9.30 மணியில் இருந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை முடிவை நாங்கள் வெளியிட்டோம். இது இணையதளத்தில் வெளியாக கூடுதலாக அரைமணி நேரம் எடுத்துக் கொள்ளும். தற்போது வாக்கு எண்ணிக்கை மையத்தில் சரியான விவரங்களை பெற முடியும்.

    ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை 30 நிமிடத்திற்கு முன்னதாக முடியாது. எனவே வழக்கமாக முதல் சுற்று முடிவுகள் வெளிவருவதற்கு 8.50 ஆகும், அது தேர்தல் கமிஷன் இணையதளத்தில் 9.30-க்குள் கிடைக்கும்.

    இவ்வாறு ராஜிவ் குமார் தெரிவித்தார்.

    Next Story
    ×