search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பௌர்ணமி அன்று கர்ப்பம் ஆகாதீர்கள் - பள்ளி மாணவிகளிடம் பெண் டிஐஜி சர்ச்சை பேச்சு
    X

    'பௌர்ணமி அன்று கர்ப்பம் ஆகாதீர்கள்' - பள்ளி மாணவிகளிடம் பெண் டிஐஜி சர்ச்சை பேச்சு

    • நமது வேதங்கள் மற்றும் இந்து ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறினேன்.
    • இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.

    அறிவான குழந்தைகளை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பள்ளி மாணவிகளிடம் பெண் டிஜிபி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான மாநில அரசின் விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 4 ஆம் தேதி ஒரு தனியார் பள்ளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிஐஜி சவிதா சோஹானே உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "நான்காவது புதிய தலைமுறையை நீங்கள்தான் கொண்டுவரப் போகிறீர்கள். அதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும். நான் சொல்வதை நீங்கள் குறித்துவைத்து கொள்ளுங்கள். பௌர்ணமி நாளில் கருத்தரிக்க கூடாது. அதிகாலை வேளையில் சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, தண்ணீரை அருந்தி நமஸ்காரம் செய்தால் அறிவான குழந்தைகள் பிறக்கும்" என்று தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பள்ளி மாணவிகளிடம் பேச வேண்டிய பேச்சா இது என்று நெட்டிசன்கள் பெண் டிஜிபியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த டிஐஜி சவிதா சோஹானே, "நமது வேதங்கள் மற்றும் இந்து ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறினேன். இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. அதனால் தான் அந்த நாளை குறிப்பிட்டு பேசினேன்" என்று விளக்கம் அளித்தார்.

    Next Story
    ×