search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிறந்தநாள் சாக்லேட்டில்  இருந்த செயற்கை பற்கள்
    X

    பிறந்தநாள் சாக்லேட்டில் இருந்த செயற்கை பற்கள்

    • சாக்லேட்டுகள் வாங்கிய கடையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • கார்கோனில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

    உணவு பொருட்களில் புழுக்கள், பூச்சிகள் கிடந்ததாக புகார்கள் அவ்வப்போது வீடியோவுடன் சமூகவலைதளங்களில் வைரலாகும். இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, ஒரு குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கிடைத்த சாக்லேட்டில் செயற்கை பற்கள் கிடந்துள்ளது.

    மத்தியபிரதேசத்தின் கர்கோன் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் மாயாதேவி. இவர் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் தன்னார்வத் தொண்டு செய்து வருகிறார். அங்குள்ள ஒரு மாணவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இவருக்கு ஒரு பெரிய சாக்லேட் கிடைத்துள்ளது. அதில் தான் 4 செயற்கை பற்கள் கிடந்துள்ளது.

    இதுகுறித்து மாயாதேவி கூறுகையில், எனக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தின் காபி சுவையுடைய சாக்லேட் கிடைத்தது. அந்த சாக்லேட்டை சாப்பிட்டதும், ஏதோ ஒரு மொறுமொறுப்பான சாக்லேட் போல உணர்ந்தேன். ஆனால் மீண்டும் ஒரு முறை மென்று சாப்பிட முயற்சித்த போது அது மிகவும் கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். இதனால் சாக்லேட்டை வெளியே எடுத்து பார்த்த போது அதில் 4 செயற்கை பற்களின் தொகுப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.

    இதுகுறித்து அவர் கார்கோனில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சாக்லேட்டுகள் வாங்கிய கடையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    Next Story
    ×