search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நீட் தொடர்பான வழக்குகள்: விசாரணையை 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
    X

    நீட் தொடர்பான வழக்குகள்: விசாரணையை 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

    • நீட் தேர்வின்போது வினாக்கள் வெளியானதாக குற்றச்சாட்டு.
    • கருணை மதிப்பெண் வழங்கியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் புகார் கூறினார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டின. மேலும் சுமார் 24 லட்சம் பேர் எதிர்காலம் கேள்விக்குறியதாகிய குற்றம்சாட்டினர்.

    இதற்கிடையே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகமையின் (NTA) முடிவுக்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குள் அனைத்தும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு நீதிமன்றம் மனுக்களை ஏற்ற நிலையில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை தனித்தனியாக பிரமாண பத்திரம் தாக்குதல் செய்திருந்தது. இந்த பிரமாண பத்திரங்கள் மனுதாக்கல் செய்த அனைவருக்கும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம் வழக்கை 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

    விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்ர் ஜெனரல் துஷார் மேக்தா, மனுதாக்கல் செய்தவர்களின் வழக்கறிஞர்களுக்கு பிரமாண பத்திரத்தை வழங்கியுள்ளோம் எனக் கூறினார்.

    இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், அறிக்கை தொடர்பான நிலை குறித்து தாங்கள் தகவல் பெற்றோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    Next Story
    ×