search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முல்லைப் பெரியாறு அணை- தமிழகம், கேரள அரசுகள் கருத்தை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
    X

    முல்லைப் பெரியாறு அணை- தமிழகம், கேரள அரசுகள் கருத்தை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

    • உச்ச நீதிமன்றத்தில் அணை பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும்.
    • அணை விவகாரத்தில் தொடர்ந்து இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது.

    முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையி்லான அமர்வு விசாரித்தது.

    அப்போது "தமிழக அரசு சார்பில் அணையை பலப்படுத்தும் பணியை செய்ய கேரளா முட்டுக் கட்டையாக உள்ளது. அணையில் எந்த புனரமைப்பு நடவடிக்கை செயல்படுத்தவும் கேரளா தடையாக உள்ளது.

    ஆனால் உச்ச நீதிமன்றத்தில் அணை பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும்" என கோருகின்றனர்.

    மேலும், அணை பாதுகாப்பு இல்லை என கூறுகின்றனர் என்று எடுத்துரைத்தனர்.

    இதற்கு கேரள தரப்பில் அணை பாதுகாப்பு தொடர்பாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு நடத்த வேண்டும், நிபுணர்கள் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்று வாதிட்டனர்.

    அணை பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தலாம், ஆனால் முதலில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய கேரளா அனுமதிக்க வேண்டும்.

    பேபி அணை பலப்படுத்தல், புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் எடுத்து கூறினர்.

    இதற்கு அணை தங்கள் மாநிலத்தில் உள்ளது, அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதே இன்னும் சவாலாக உள்ளது என்று கேரள அரசு சார்பில் வாதிட்டனர்.

    இதையடுத்து நீதிபதிகள் இந்த விவகாரத்தில் 142 அடியாக நீர்மட்டம் உயர்த்தப்பட்ட விவகாரம் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரம். அதனை இதற்கு மேல் பேச வேண்டியது இல்லை.

    முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்க எந்த பிரச்சினையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே அது குறித்து ஆய்வு செய்யத் தேவை இல்லை.

    மேலும் அணை விவகாரத்தில் தொடர்ந்து இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது. அணையை பலப்படுத்தும் விவகாரம் குறித்த வழக்கை மட்டும் விசாரிக்கலாம்.

    எனவே தற்போது நாங்கள் அறிய விரும்புவது ஒன்று தான், அதாவது ஏற்கனவே அணை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த முல்லைபெரியாறு அணை கண்காணிப்பு குழு தொடரவேண்டுமா? அல்லது 2021 அணை பாதுகாப்பு சட்டப்படி அமைத்த குழு வேண்டுமா?

    எனவே இதுதொடர்பாக தமிழகம், கேரளா இரு மாநிலமும் தங்கள் கருத்தை தெரிவியுங்கள் என்று நீதிபதிகள் கூறினா். பின்னர் இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 3வது வாரத்தில் விசாரிக்கலாம் என தள்ளி வைத்தனர்.

    Next Story
    ×