search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பயங்கரவாதி ராணா இந்தியாவுக்கு விரைவில் அழைத்து வரப்படுகிறார்
    X

    பயங்கரவாதி ராணா இந்தியாவுக்கு விரைவில் அழைத்து வரப்படுகிறார்

    • கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க போலீசரால் கைது செய்யப்பட்டார்.
    • விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    மும்பை:

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள்.

    இச்சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் ராணா என்பவர், கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க போலீசரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இதற்கிடையே ராணாவை நாடு கடத்த இந்தியா கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தது. இதையடுத்து லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்தது. இதை எதிர்த்து ராணா அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு ஆதரவு அளிப்பதாகவும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ராணாவின் மேல்முறையீட்டு மனு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    Next Story
    ×