search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாம் சட்டமன்றத்தில் தொழுகை இடைவேளை ரத்து.. விளம்பரம் தேடும் கீழ்த்தரமான செயல் - தேஜஸ்வி சாடல்
    X

    அசாம் சட்டமன்றத்தில் தொழுகை இடைவேளை ரத்து.. 'விளம்பரம் தேடும் கீழ்த்தரமான செயல்' - தேஜஸ்வி சாடல்

    • அசாம் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது முதல் இருந்த இந்த இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது
    • அசாம் முதல்வர் இதைக் கீழ்த்தரமான புகழுக்காகச் செய்திருக்கிறார். இஸ்லாமியர்களை பாஜக எளிமையான இலக்காக மாற்றியுள்ளது என்று சாடியுள்ளார்.

    அசாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை தோறும் இஸ்லாமிய எம்.எல்.ஏக்கள் தொழுகை செய்ய உணவு நேரத்துக்குப் பின் வழங்கப்பட்டு வந்த 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது. அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் இன்று தொழுகை இடைவேளை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியுள்ளது. அசாம் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது முதல் இருந்த இந்த இடைவேளையை பாஜக அரசு ரத்து செய்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த உத்தரவு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், 2 மணிநேர ஜும்ஆ இசைவேலையை ரத்து செய்யப்பட்டதன் மூலம் [சட்டமன்றத்தின்] செயல்திறனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, மற்றொரு [ஆங்கிலேய] காலனிய கால சடங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 1937 ஆம் ஆண்டில் முஸ்லீம் லீக்கை சேர்ந்த சையத் சாதுல்லாவால் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அசாம் முதல்வர் இதைக் கீழ்த்தரமான புகழுக்காகச் செய்திருக்கிறார். இஸ்லாமியர்களை பாஜக எளிமையான இலக்காக மாற்றியுள்ளது என்று சாடியுள்ளார். இதற்கிடையில் முஸ்லிம் திருமணம், விவாகரத்தை கட்டாய பதிவு செய்யும் மசோதா நேற்று அசாம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் மதக் கலவரம் உருவாக்கும் விதத்தில் ஹிமந்த பிஸ்வா பேசி வருவதாக அசாமில் உள்ள 18 எதிர்க்கட்சிகள் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×