search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்து ஆண் நபருடன் பேசிக்கொண்டிருந்ததால் ஆத்திரம்.. சிறுமிகள் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்
    X

    இந்து ஆண் நபருடன் பேசிக்கொண்டிருந்ததால் ஆத்திரம்.. சிறுமிகள் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்

    • ஆண் ஒருவருடன் பேசியதாக கூறி, இஸ்லாமிய சிறுமிகள் இருவரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.
    • 38 வயதான முகமது மெஹ்தாப் என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் என்கிற பகுதியில், இந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவருடன் பேசியதாக கூறி, இஸ்லாமிய சிறுமிகள் இருவரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.

    இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக, 38 வயதான முகமது மெஹ்தாப் என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

    சுமார் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள், பைக்கில் பயணித்த ஒருவரிடம் வழி கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இந்து ஆண்டு நண்பரிடம் பேசியதாக கூறி தாக்கி உள்ளனர். மேலும், அவர்கள் அணிந்திருந்த ஹிஜாபையும் கழட்ட வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் மக்கள் கூடியுள்ளனர். இந்து நபரிடம் சிறுமிகள் பேசினார்கள் என்ற விஷயம் பெரிதாகியுள்ளது.

    அப்போது, சிறுமிகள் தங்களது சகோதரரை அண்ணனை அழைக்க, சிறுமிகள் போனை எடுத்தபோது, அந்த கும்பல் அதை பிடுங்கி எறிந்துள்ளது. மேலும், அந்த சிறுமிகள் இளைஞரிடம் பரிசு கொடுத்ததாகவும் மர்ம கும்பல் குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், பைக் ஓட்டிய அந்த இளைஞர் இந்து இல்லை என்று தெரிந்த பிறகுதான் மர்ம கும்பல் சிறுமிகளை விடுவித்தது. அங்கிருந்து தப்பிய சிறுமிகள் உள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களில் ஒருவர்," தன்னை மர்ம கும்பல் அடித்து ஹிஜாபை கழற்ற முயன்றதாக" வாக்குமூலம் அளித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரூரல் எஸ்பி சாகர் ஜெயின் தெரிவித்தார். பரப்பப்படும் வீடியோவைப் பயன்படுத்தி மற்றவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

    Next Story
    ×