search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விவிபாட் விவகாரம்: ஜெர்மனியை உதாரணம் காட்டிய வழக்கறிஞருக்கு நீதிபதி அளித்த பதில்...
    X

    விவிபாட் விவகாரம்: ஜெர்மனியை உதாரணம் காட்டிய வழக்கறிஞருக்கு நீதிபதி அளித்த பதில்...

    • நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும்.
    • இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும்.

    இந்தியாவில் EVMs மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விவிபாட் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை காட்டும். ஆனால் ரசீது வாக்காளரிடம் வழங்கப்படாது. பெட்டிக்குள் சேகரிக்கப்படும்.

    EVMs மீது சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சியினர் விவிபாட்டில் உள்ள அனைத்து ரசீதுகளையும் எண்ண வேண்டும் எனத் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து விவிபாட் என்ற வகையில் எண்ணப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் அனைத்து விவிபாட்டையும் எண்ண முடியாது எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வாக்களித்ததற்கான ரசீது வழங்க வேண்டும். பின்னர் அந்த ரசீது ஒரு பெட்டியில் சேரிக்கப்பட்டு அது எண்ணப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    ஜனநாயக சீரமைப்புக்கான சங்கத்தின் சார்பில் ஆஜரான பிரஷாந்த் பூஷன் "நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும். இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும். அதை அவர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும். விவிபாட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது" என்றார். அத்துடன் ஜெர்மனியில் நடைபெறும் தேர்தல் நடைமுறையை உதாரணத்திற்கு கூறினார்.

    அதற்கு நீதிபதி திபன்கார் தத்தா, ஜெர்மனியின் மக்கள் தொகை எவ்வளவு என கேட்க, பிரஷாந்த் பூஷன் சுமார் 6 கோடி இருக்கும் என்றார்.

    அதற்கு நீதிபதி திபன்கர் தத்தா "வெளிநாட்டு தேர்தலை நம்முடைய தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது. என்னுடைய வீடு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. ஜெர்மனியை விட மேற்கு வங்காளத்தில் மக்கள் தொகை அதிகம். நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பது அவசியம். இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. இதுபோன்ற உதாரணங்களை தெரிவிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது" என்றார்.

    Next Story
    ×