search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போட்டித் தேர்வுகள் மூலம் ரூ. 3,500 கோடி வருமானம் ஈட்டிய தேசியத் தேர்வு முகமை..
    X

    போட்டித் தேர்வுகள் மூலம் ரூ. 3,500 கோடி வருமானம் ஈட்டிய தேசியத் தேர்வு முகமை..

    • மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் இந்த தகவலை தெரிவித்துள்ளார்
    • 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.

    2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான CUET, பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடந்தி வருகிறது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,513 கோடி லாபம் ஈட்டியுள்ளது . கடந்த புதன்கிழமை பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி விவேக்.கே எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பதிலளித்துப் பேசும்போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    ஈட்டிய தொகையில் 87.2 சதவீதம் தேர்வுகளை நடத்துவதற்காகச் செலவிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட CUET பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.

    Next Story
    ×