என் மலர்
இந்தியா
உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: நவீன் பட்நாயக்
- உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஒடிசா அறிவித்தது.
- நன்கொடையாளர்களின் தைரியம், தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம் என தெரிவித்தது.
புவனேஷ்வர்:
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஒடிசா அரசு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறியதாவது:
உறுப்புகளை தானம் செய்யும் நபரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும்.
மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களது உறவினர்கள் தானம் செய்ய தைரியமாக முடிவெடுத்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும்.
நன்கொடையாளர்களின் தைரியம் மற்றும் தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம்.
உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.