என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிரச்சனைகளை பின்னர் விவாதிக்கலாம்.. பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் நவீன் பட்நாயக் கட்சி பங்கேற்கிறது
- பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
- ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.
புதுடெல்லி:
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.
இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புத் திட்டத்தை பிஜு ஜனதா தளம் நிராகரித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி பதவி மற்றும் பாராளுமன்றம் இரண்டும் புனிதமானவை என்றும், பிரச்சனைகள் பின்னர் விவாதிக்கப்படலாம் என்றும் அக்கட்சி கூறி உள்ளது.
இதன்மூலம் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளில் பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்த முதல் கட்சி பிஜு ஜனதா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.