என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இந்த அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்: மோகன் பக்வத்
- மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியானது.
- மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி பவன் வளாகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும். மணிப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைதி நிலவியது. அங்கு துப்பாக்கி கலாச்சாரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால் அங்கு மீண்டும் வன்முறை உருவாகியுள்ளது. மணிப்பூரில் நிலவும் சூழ்நிலையை முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் இனக் குழுக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்து வருகிறது.
மெய்தேய்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சினர். மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தின்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுவரை இந்த கலவரத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயாத நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.