search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் கை, கால் வீக்கத்துடன் புதுவகை காய்ச்சல் உஷார்....
    X

    ஆந்திராவில் கை, கால் வீக்கத்துடன் புதுவகை காய்ச்சல் உஷார்....

    • வித்தியாசமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
    • காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால்கள் வீக்கம், மூட்டு வலியால் அவதி.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் வித்தியாசமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால்கள் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த வைரஸ் காய்ச்சல் சிக்குன் குனியாவை ஒத்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆர்போ வகையை சேர்ந்த வைரஸ் தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் மச்சர்லா மற்றும் பல்நாடு பகுதிகளில் பரவி வருகிறது.

    வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தாலும் மற்ற அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்கள் பெரும்பாலானோர் குண்டூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    3,4 நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்தாலும் மூட்டு வலி, வீக்கம் குறையவில்லை. 4 முதல் 6 வாரங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர்.

    காய்ச்சல் பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம்களை நடத்தி பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    2 வாரங்களுக்கு மேல் மூட்டு வலி இருந்தால் குறைந்த அளவு ஸ்டீராய்டு மருந்தை கொடுத்தால் நிவாரணம் பெறலாம் என நுரையீரல் நிபுணர் டாக்டர் சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

    நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    இது ஆந்திராவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×