search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
    X

    டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 

    நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

    • இந்தியா கேட், கேட்வே ஆப் இந்தியா, பாந்த்ரா பகுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மக்கள்.
    • நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.

    2023 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தலைநகர் டெல்லி உள்பட முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு களைகட்டியிருந்தது. டெல்லியின் கன்னாட் பிளேஸ் மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

    இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு புத்தாண்டைக் கொண்டாட குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நூற்றுக்கணக்கானோர் ராஜபாதையான கர்த்வயா பாத் பகுதியில் திரண்டதால் அந்த பகுதி சுற்றுலாத்தளம் போல் காட்சி அளித்தது. புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி பாதுகாப்பை உறுதி செய்ய தலைநகர் முழுவதும் 18,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


    .இதேபோல் தெற்கு மும்பையில் கேட்வே ஆப் இந்தியா, மரைன் டிரைவ் மற்றும் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். மேலும் மும்பை புறநகர் பகுதிகளில், பாந்த்ரா, மார்வ் கடற்கரை பகுதிகளில் ஏராளமானோர் குவிந்தனர்.

    மும்பை மாநகராட்சி, சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், கேட்வே ஆப் இந்தியா போன்ற முக்கிய கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஹோட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.


    இதேபோல் கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் களைகட்டியிருந்தன. பனாஜி நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளில் ஏராளமான மக்கள் ஆடிப்பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.


    இதேபோல் கேரளா மாநிலம் கொச்சி, இமாச்சல பிரதேச மாநிலம் மணாலி பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    Next Story
    ×