search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது
    X

    பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது

    • 7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் இன்னும் திறக்கப்படவில்லை
    • பாலம் இடிந்து விழுந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.

    இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தரமற்ற பொருட்களை கொண்டு பாலம் கட்டப்பட்டதால் தான் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கட்டுமான நிறுவனத்தின் அலட்சியத்தால் தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் விஜய்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் பாலங்கள் இடிந்து விழுவது ஒன்றும் புதிதல்ல. கடந்தாண்டு பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×