என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட்.. 'மோடி எல்லாருக்கும் BORE அடித்துவிட்டார்'.. வயநாட்டில் ராகுல் கலகல!
- மோடி மக்களின் நல்வாழ்வை நிராகரித்து பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்.
- நளினியை நினைத்து வருந்துகிறேன் என்று பிரியங்கா என்னிடம் கூறினார்
வயநாடு மக்களவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தங்கைக்கு ஆதரவாக அண்ணன் ராகுல் காந்தியும் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார். தன்னை எம்.பி.ஆக்கி அழகு பார்த்த வயநாடு தொகுதியில் நேற்றைய தினம் பிரியங்காவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆனது முதல் பிரதமர் மோடிக்கு எதிரான அனல் பறக்கும் விமர்சனங்களை முன்வைத்து பாஜகவினரைக் கொந்தளிக்க வைத்த ராகுல் காந்தி நேற்றைய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை பற்றி அதிகம் பேசுவதைத் தவிர்த்துள்ளார்.
அதற்கான காரணத்தையும் அவர் மேடையிலேயே தெரிவித்தார். முன்னதாக தனது உரையில் பிரதமர் மோடி மக்களின் நல்வாழ்வை நிராகரித்து பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று பிரியங்கா காந்தி விமர்சித்திருந்தார். இதன்பின் பேச வந்த ராகுல் காந்தி, இந்த கூட்டத்தில் என் முன் இரண்டு சாய்ஸ் இருக்கிறது. ஒன்று அரசியல் ரீதியாக பேசுவது மற்றொன்று குடும்ப உறுப்பினர்களான உங்களுடன் சகஜமாகக் கலந்துரையாடுவது. நான் உங்களோடு பேசுவதை தேர்வு செய்கிறேன்.
உங்களின் வேட்பாளரை [பிரியங்காவை] பற்றியே பேசுகிறேன். பிரதமர் மோடியை பற்றி பிரியங்கா ஏற்கனவே ஒருமுறை பேசிவிட்டார். எனவே அவரைப் பற்றி இரண்டாவது முறை இந்த மேடையில் பேச வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் அவர் BORE அடித்துவிட்டதால் அதை தவிர்த்து விடலாம் என்று ராகுல் தெரிவித்தார்.
அதன்பின் தன் தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினியை பிரியங்கா சிறையில் சந்தித்து பேசியதையும் ராகுல் குறிப்பிட்டார். நளினியை நினைத்து வருந்துகிறேன் என்று பிரியங்கா தன்னிடம் கூறியதாக ராகுல் தெரிவித்தார். நமது நாட்டுக்கு தற்போது இந்த மன்னிக்கும் மனப்பாங்குள்ள அரசியல் தான் தேவை என்றும் ராகுல் வலியுறுத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்