என் மலர்
இந்தியா

ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை: சித்தராமையா

- சச்சின் பன்சால் தற்கொலை கடிதத்தில் பிரியங்க் கார்கே பெயர் இடம் பெற்றுள்ளதா?.
- எங்கேயும் அவருடைய பெயர் இல்லை. எந்த விசாரணைக்கும் தயார் என மந்திரி தெரிவித்துள்ளார்.
சிவில் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் பிரியங்க் கார்கேவுக்கு தொடர்பில்லை என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பிரியங்க் கார்கே பெயர் இல்லை. அவருக்கு எந்த பங்கும் இல்லை. அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. இருந்தபோதிலும் அவரை இன்னும் பதவி விலகச் சொல்கிறார்கள். அவர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? குற்ற புலனாய்வுத் துறை (சிஐடி) அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது. ஒப்பந்ததாரர் ஒருவர் மந்திரி 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக கடிதத்தில் ஈஸ்வரப்பா பெயரை குறிப்பிட்டிருந்தார். அதனால் ஈஸ்வரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
சச்சின் பன்சால் தற்கொலை கடிதத்தில் பிரியங்க் கார்கே பெயர் இடம் பெற்றுள்ளதா?. எங்கேயும் அவருடைய பெயர் இல்லை. எந்த விசாரணைக்கும் தயார் என மந்திரி தெரிவித்துள்ளார் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பிதார் மாவட்டத்தில் ஒப்பந்ததாரர் சச்சின் பன்சால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பிரியங்க் கார்கே ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வரும் நிலையில் சித்தராமையா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒப்பந்ததரார் தற்கொலை செய்தபோது கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் ராஜு கபனுர் என்பவர் தன்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், தான் அவ்வளவு பணம கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பகனுர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் காரிகேவின் நெருங்கிய உதவியாளர் என பாஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.