search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    4-வது முறை ஆட்சி உத்தரவாதம் கிடையாது... மந்திரியை கிண்டல் செய்த நிதின் கட்கரி
    X

    4-வது முறை ஆட்சி உத்தரவாதம் கிடையாது... மந்திரியை கிண்டல் செய்த நிதின் கட்கரி

    • பாஜக 4-வது முறை ஆட்சிக்கு வந்தால் மந்திரி பதவி கிடைக்கும்- ராம்தாஸ் அத்வாலே.
    • நாங்கள் 4-வது முறை ஆட்சிக்கு வருவது உத்தரவாதம் கிடையாது.

    மத்திய மந்திரி நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். பா.ஜ.க.-வை சேர்ந்த இவர் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசச்கூடியவர். தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய மந்திரியாக இருக்கும் ராம்தாஸ் அத்வாலா, மூன்று முறை மந்திரியாக உள்ளேன். 4-வது முறையம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நான் மந்திரியாவேன் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இதற்கு நிதின் கட்கரி, நீங்கள் மந்திரியாவீர்கள். ஆனால், பா.ஜ.க. 4-வது முறையாக ஆட்சி அமைப்பது உத்தரவாதம் என, மந்திரியை கிண்டல் செய்துள்ளார்.

    இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில் "மூன்று முறை மந்திரியாக உள்ளேன். 4-வது முறையம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நான் மந்திரியாவேன். என்னுடைய இந்திய குடியரசு கட்சி (ஏ) மகாராஷ்டிரா மாநிலத்தின் மஹாயுதி கூட்டணியில் உள்ளது. நாம் குறைந்தபட்சம் 10 முதல் 12 இடங்களை வரும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் பெற வேண்டும். வடக்கு நாக்பூர் உள்பட விதர்பாவில் மூன்று முதல் நான்கு இடங்களை கேட்போம்" என்றார்.

    இதற்கு மத்திய மந்திரி நிதின் கட்சரி, "எங்களுடைய அரசு 4-வது முறையாக ஆட்சி செய்யுமா? என்பது உத்தரவாதம் கிடையாது. ஆனால், ராம்தாஸ் அத்வாலா உறுதியாக மந்திரி ஆவார்" என்றார்.

    ராம்தாஸ் அத்வாலேவால் பல அரசாங்கங்களில் அமைச்சரவையில் இடத்தைப் பிடிக்கும் திறன் குறித்து நிதின் கட்கரி கிண்டல் செய்தார்.

    மகாராஷ்டிரா மாநில மஹாயுதி அரசில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இடம் பிடித்ததால், உறுதி அளித்தபோதிலும் இந்திய குடியரசு கட்சி (ஏ)யால் மந்திரி சபையில் இடம்பெற முடியவில்லை. எங்களுக்கு கேபினட் மந்திரி சபை, இரண்டு கார்ப்பரேசன் சேர்மன், கிராமம் அளிவிலான கமிட்டிகளில் பங்கு தருவதாக சொன்னார்கள். இதெல்லாம் நடக்கவில்லை. ஏனென்றால் பவார் இடம் பெற்றதால்.

    288 இடங்களை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.

    பா.ஜ.க.-வுக்கு 103 எம்.எல்.ஏ.-க்களும், சிவ சேனாவுக்கு 40 எம்.எல்.ஏ.-க்களும், காங்கிஸ்க்கு 40 எம்.எல்.ஏ.-க்களும், சிவசேனாவுக்கு (உத்தவ் தாக்கரே) 15 எம்.எல்.ஏ.-க்களும், தேசியவாத காங்கிரஸ்க்கு (சரத் பவார்) 13 எம்.எல்.ஏ.-க்களும் உள்ளனர்.

    Next Story
    ×