என் மலர்
இந்தியா
நீட் பயிற்சி மைய கட்டணத்திற்கான ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்த்த மாணவர்களுக்கு ஏமாற்றம்
- பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.
ஜெய்ப்பூர்:
பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் உள்ள நீட் தேர்வாளர்கள் பயிற்சிக் கட்டணத்தில் 18 சதவீத ஜி.எஸ்.டி.யில் எந்த நிவாரணமும் அறிவிக்கப்படாததால் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, உத்தர பிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த வைஷ்ணவி கூறுகையில், கல்வி ஒரு உரிமை, அதற்கு வரி விதிக்கக் கூடாது. பயிற்சிக் கட்டணத்தில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருந்தால் அது எங்கள் பெற்றோருக்கு நிதி நெருக்கடியைக் குறைத்திருக்கலாம். ஆனால் அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும், கல்விக் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ள வைஷ்ணவி, இது ஏழை குடும்ப மாணவர்களுக்கு உதவும். கல்விக்கான 3 சதவீத வட்டி குறைப்பு அதிக கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறினார்.