என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நீட் தேர்வு முறைகேடு... ரூ. 500 நோட்டுக்களை வீசி போராடிய மாணவர்கள்
Byமாலை மலர்20 Jun 2024 1:01 PM IST (Updated: 20 Jun 2024 1:07 PM IST)
- இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) என்பது இந்திய தேசிய காங்கிரசின் மாணவர் பிரிவாகும்.
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி முழக்கமிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வரும் 21-ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரசின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம், டெல்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இல்லம் முன்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது மாணவர் காங்கிரசார் 500 ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி முழக்கமிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×