என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஒடிசாவில் மழை வெள்ளத்தால் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு
- வெள்ளப்பெருக்கால் வட மாவட்டங்களில் அதிக பாதிப்பு.
- 58 மீட்புக் குழுக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
புவனேஸ்வர்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் ஜார்க்கண்டில் இருந்து வெள்ள நீர் திறந்து விடப்படுவதால், வட ஒடிசாவில் அனைத்து ஆறுகளிலும் நீர்மட்டம் அபாய கட்டத்தில் உள்ளது. இதனால் ஒடிசா வட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தேசிய பேரீடர் மீட்பு படையினர், மாநில பேரீடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் அடங்கிய 58 மீட்புக் குழுக்கள் பாலசோர் மற்றும் மயூர்பாஞ்ச் மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடைவிடாத மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 763 கிராமங்களில் 5 லட்சம் பேர் மாயமாகி உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள குச்சிண்டா பகுதியில் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும், அது விரைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஒடிசாவைக் கடந்து விட்டதால் நேரடி பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.