search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானாவில் சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவர்கள் விலகல்- புதிய கட்சி தொடங்க திட்டம்
    X

    அரியானாவில் சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவர்கள் விலகல்- புதிய கட்சி தொடங்க திட்டம்

    • சுக்பீர் சிங் பாதலின் அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டாம் என்று கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.
    • கர்னாலில் நடந்த கூட்டத்தில், புதிய கட்சியை வழிநடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

    குருஷேத்ரா:

    பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் சக்பீர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் படுதோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து கட்சித் தலைமையில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கருத்து கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், சுக்பீர் சிங் பாதலின் அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டாம் என்று கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், சிரோமணி அகாலி தளம் கட்சியின் அரியானா மாநில தலைவர்கள் சிலர் கட்சியில் இருந்து விலகினர். மேலும், அவர்கள் ஒன்றிணைந்து அரியானாவில் புதிய கட்சியை தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இது சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    கட்சியில் இருந்து வெளியேறியவர்களில் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் அசந்த், எஸ்ஜிபிசியின் சிர்சா உறுப்பினர் குர்மீத் சிங் திலோகேவால் மற்றும் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவி ஆகியோர் முக்கியமானவர்கள்.

    கர்னாலில் நடந்த கூட்டத்தில், புதிய கட்சியை வழிநடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக ஒரு தலைவர் கூறினார். இந்தக் குழு அடுத்த இரண்டு மாதங்களில் அரியானாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சீக்கியர்களை கட்சியில் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளும். அதன்பின்னர், கர்னாலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு, அதில் மாநில செயற்குழு அறிவிக்கப்படும் என்றும் அந்த தலைவர் தெரிவித்தார்.

    Next Story
    ×