என் மலர்
இந்தியா
பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்: மேல்சபையில் அமளி-ஒத்திவைப்பு
- மோடி, அதானிக்கு உள்ள தொடர்பை கூறி கோஷங்களை எழுப்பினார்கள்.
- பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடெல்லி:
சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு (ஜே. பி.சி.) விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த பிரச்சனையை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிளப்பி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அதானி ஊழல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ், தி.மு.க. இடதுசாரி எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் பதாகைகள் வைத்து இருந்தனர். கோஷங்களையும் எழுப்பினார்கள்.
மோடி, அதானிக்கு உள்ள தொடர்பை கூறி கோஷங்களை எழுப்பினார்கள். ஜே.பி.சி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோஷ மிட்டனர்.
பாராளுமன்ற மேல் சபையில் இன்றும் பல்வேறு பிரச்சனைகளுக்காக அமளி நிலவியது.
மேல்சபை கூடியதும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ஜார்ஜ் சோரஸ்-காங்கிரஸ் தலைமைக்கு இடையே உள்ள பிரச்சனையை கிளப்பினார்கள். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் மேல்சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கரை விமர்சித்தனர்.
இது தொடர்பாக கடும் அமளி நிலவியது. அமளிக்கு நிலையில் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.