search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை கண்டித்து சரத்பவார், உத்தவ் தாக்கரே போராட்டம்
    X

    சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை கண்டித்து சரத்பவார், உத்தவ் தாக்கரே போராட்டம்

    • மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி மகாராஷ்டிரா மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    சிலை நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி சிலை இடிந்து விழுந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டின. கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்த நிலையில் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை கண்டித்து மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் (எஸ்.பி.) சரத் பவார், சிவசேனா தலைவர் (யூ.பி.டி.) உத்தவ் தாக்கரே இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பங்கேற்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    Next Story
    ×