search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகு - 10 ஊழியர்கள் கைது
    X

    பாகிஸ்தான் படகு பறிமுதல்

    இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகு - 10 ஊழியர்கள் கைது

    • இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகு அத்துமீறி நுழைந்தது.
    • படகை கைப்பற்றிய கடலோர காவல்படை ரூ.300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்தனர்.

    புதுடெல்லி:

    இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். மேலும் படகிலிருந்த ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக இந்திய கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குஜராத் மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினருடன் இணைந்து மேற்கோண்ட கூட்டு நடவடிக்கையில், இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது. படகிலிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் சுமார் 40 கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்காக படகு ஓகாவுக்கு கொண்டு வரப்படுகிறது என பதிவிட்டுள்ளது.

    Next Story
    ×