என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மும்பை விமான நிலையத்தில் பானி பூரி விலை ரூ.333- பயணிகள் கடும் அதிர்ச்சி
- வாயில் நீர் ஊற வைக்கும் மிகவும் சுவையான பானி பூரியின் விலை, மும்பையில் ரூ.25 முதல் ரூ.50 வரை மட்டுமே.
- உணவகத்தை நடத்துபவர்களுக்கு நேரடியாக விமான நிலைய நிர்வாகத்தார் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ இடங்களை கொடுப்பதில்லை.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பானி பூரி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதன் விலை ரூ.333 என அதில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த சில பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாயில் நீர் ஊற வைக்கும் மிகவும் சுவையான இந்த பானி பூரியின் விலை, மும்பையில் ரூ.25 முதல் ரூ.50 வரை மட்டுமே. இந்நிலையில் இது விமான நிலையத்தில் ரூ.333-க்கு விற்கப்படுவது சரியல்ல என்று பயணி ஒருவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விலையைப் பார்த்ததுமே பசி பறந்துபோய் விடும் என்றும் அவர் கருத்தைப் பதிவு செய்து உள்ளார்.
மேலும் பானி பூரி, தஹி பூரி, சேவ் பூரி படங்களுடன் அந்த விலைப்பட்டியல் இருக்கும் புகைப்படத்தையும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனிடையே இந்தப் பதிவுக்கு எக்ஸ் தளத்தில் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஒருவர் கூறும்போது, "விமான நிலையத்தில் அது விற்பனை செய்யப்படுவதால் அதன் விலை அதிகரித்துள்ளது. விமான நிலையக் கட்டணம், பராமரிப்பு கட்டணம், செயல்பாட்டு கட்டணம், பயன்பாட்டுக் கட்டணம், ஊதியம் உள்ளிட்ட பல விவகாரங்கள் அதில் சேர்கின்றன. அதனால்தான் வெளியில் ரூ.33-க்கு கிடைக்கும் பானி பூரி இறுதியில் விமான நிலையத்தில் ரூ.333-க்குக் கிடைக்கிறது" என்றார். மற்றொரு பயணி ஒருவர் கூறும்போது, "இது நிச்சயம் பகல் கொள்ளை என்று தெரிவித்துள்ளார். பெரும்பாலான பயனர்கள் இதை பகல் கொள்ளை என்றே தெரிவித்துள்ளனர்.
மற்றொரு பயணி கூறும்போது, "உணவகத்தை நடத்துபவர்களுக்கு நேரடியாக விமான நிலைய நிர்வாகத்தார் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ இடங்களை கொடுப்பதில்லை. இதற்காக சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளன. அந்த நிறுவனங்கள் மூலமாக உணவகங்கள் விமான நிலையத்தில் வாடகைக்கு இடத்தைப் பிடிக்கின்றன. ஒருவேளை, உணவகங்களுக்கு விமான நிலைய நிர்வாகம் நேரடியாக இடத்தை வாடகைக்குக் கொடுத்தால் உணவுகளின் விலை குறைய வாய்ப்பு உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்