என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைப்பு
Byமாலை மலர்9 Aug 2024 4:41 PM IST
- நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23-ந்தேதி தாக்கல் செய்தார்.
- எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2024-2025-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை 23-ந்தேதி தாக்கல் செய்தார். அதன்பின் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இன்று மாநிலங்களவையில் ஜெயா பச்சன்- மாநிலங்களவை தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதில் ஒரு அமர்வுக்கு முன்னதாகவே பட்ஜெட் கூட்டம் நிறைவடைந்துள்ளது.
Next Story
×