search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தான் முதலமைச்சர் யார்?: பா.ஜனதா உயர்மட்ட குழு இன்று மாலை இறுதி முடிவு
    X

    ராஜஸ்தான் முதலமைச்சர் யார்?: பா.ஜனதா உயர்மட்ட குழு இன்று மாலை இறுதி முடிவு

    • கோபிசந்த் மீனா, சங்கர் சிங் ராவத் உள்பட 20-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வசுந்தரா ராஜேவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
    • ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சிபி ஜோஷியை தேர்தல் பொறுப்பாளராக இருந்த அருண் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதில் பாரதிய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-மந்திரியாக யாரும் முன்னிறுத்தப்படவில்லை.

    இந்நிலையில் தேர்தலில் அபார வெற்றி பெற்று கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த தியா குமாரி,

    எம்.பி. பாபா பாலக்நாத், மத்திய மந்திரி கஜேந்திர சகாவாத் ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான பரிசீலனையில் உள்ளனர்.

    இந்நிலையில் கோபிசந்த் மீனா, சங்கர் சிங் ராவத் உள்பட 20-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வசுந்தரா ராஜேவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் முதல்-மந்திரியாக வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

    இதுவரை முதல்- மந்திரியை கட்சி தலைமை தேர்வு செய்யவில்லை. இந்நிலையில் வசுந்தரா ராஜே வீட்டுக்கு சென்ற 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்துள்ளனர்.

    இதுகுறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் ராவத் கூறுகையில், வசுந்தரா ராஜே தனது பதவி காலத்தில் முதல்-மந்திரியாக சிறப்பாக செயல்பட்டார் என்றார்.

    இதற்கிடையே ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சிபி ஜோஷியை தேர்தல் பொறுப்பாளராக இருந்த அருண் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது முதலமைச்சர் பதவி குறித்து கேட்டபோது, "முதலமைச்சர் யார் என்பதை உயர்மட்ட குழு முடிவு செய்யும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்" என்றார்.

    புதிய முதல்-மந்திரி யார்? என்பது குறித்து பா.ஜ.க. தலைமை இன்று அறிவிப்பு வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×