என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்- உத்தவ் தாக்கரே
- சிவ சேனா கட்சி மற்றும் வில்-அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது
- உத்தவ் தாக்கரே இன்று தனது வீட்டின் முன் கூடியிருந்த ஆதவாளர்கள் மத்தியில் பேசினார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவ சேனா கட்சிக்கு உரிமை கொண்டாடி உத்தவ் தாக்கரே அணியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியும் தேர்தல் ஆணையத்தில் சட்டப் போராட்டம் நடத்தின. இதில், ஷிண்டே அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
ஏக்நாத் ஷிண்டே அணிதான் சட்டப்பூர்வ சிவசேனா என்று கூறிய தேர்தல் ஆணையம், கட்சியின் வில்-அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டது.
இதற்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே இன்று தனது வீட்டின் முன் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'பிரதமர் மோடியின் அடிமையான தேர்தல் ஆணையம் இதற்கு முன் செய்யாததை செய்துள்ளது. ஆதரவாளர்கள் அனைவரும் பொறுமைகாக்க வேண்டும். மும்பை உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும். கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது. திருடர்களுக்கு பாடம் புகட்டப்பட வேண்டும்' என்றார்.
உத்தவ் தாக்கரே அணியினர் 'சிவ சேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' என்ற பெயரையும், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தீப்பந்தம் சின்னத்தையும் வைத்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.