என் மலர்
இந்தியா

ரூ. 4500 கோடிக்கு பூனாவாலாவின் இன்சூரன்ஸ் கம்பெனியை கையகப்படுத்திய பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவனம்

- ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், டிஎஸ் குரூப் உடன் சேர்ந்து கையகப்படுத்தியுள்ளது.
- மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் பொது காப்பீட்டுத் துறையில் உள்ள அனைத்து முக்கிய காப்பீட்டையும் வழங்குகிறது.
ஆதார் பூனவாலாவின் சனோடி பிராப்பர்ட்டிஸ் மற்றும் ரைசிங் சன் ஹோல்டிங்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தன. இந்த நிறுவனத்தை யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மற்றும் தரம்பால் சத்யபால் குரூப் (டிஎஸ் குரூப்) அகியவை கையகப்படுத்தியுள்ளன.
4500 கோடி ரூபாய்க்கு ஆயுர்வேத நிறுவனம் மற்றும் தரம்பால் சத்யபால் குரூப் மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கையப்படுத்தியுள்ளது. இது ஒழுங்குமுறையின் ஒப்புதலை பொறுத்து நடைமுறைப் படுத்தப்படும்.
மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் பல்வேறு பிரிவில் 70-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை கொண்டுள்ளது. பொது காப்பீட்டுத் துறையில் உள்ள அனைத்து முக்கிய காப்பீட்டையும் வழங்குகிறது. மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் செலிகா டெவலப்பர்ஸ் மற்றும் ஜகுவார் அட்வைசரி சர்வீசஸ் ஆகியவற்றையும் ராம்தேவ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.