என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அருணாசல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பீமா காண்டு
- அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது.
- 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இடா நகர்:
அருணாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி பீமா காண்டு உள்பட பா.ஜ.க.வை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இதற்கிடையே, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பீமா காண்டு மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3-வது முறையாக பீமா காண்டு அருணாசல பிரதேசத்தின் முதல் மந்திரி ஆகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை இன்று சந்தித்தனர். அப்போது அவர்களை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது.