search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தினமும் ரூ. 5.7 கோடி, ஆண்டுக்கு ரூ. 2,153 கோடி நன்கொடை வழங்கும் ஷிவ் நாடார்
    X

    தினமும் ரூ. 5.7 கோடி, ஆண்டுக்கு ரூ. 2,153 கோடி நன்கொடை வழங்கும் ஷிவ் நாடார்

    • முன்னணி இந்திய நன்கொடையாளராக ஷிவ் நாடார் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.
    • ரிலையன்ஸ் அறக்கட்டளை ரூ.407 கோடி நன்கொடையுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    உலக பணக்காரர்கள் பட்டியல் மற்றும் இந்திய நன்கொடையாளர் பட்டியல் போன்றவற்றை ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் ஆண்டுக்கு ரூ. 2,153 கோடி நன்கொடைகள் வழங்கி முன்னணி இந்திய நன்கொடையாளராக தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஹுருன் அமைப்பு தெரிவித்துள்ளது.

    நாள் ஒன்றுக்கு அவர் சராசரியாக ரூ.5.7 கோடி வரை நன்கொடை அளித்துள்ளார். 79 வயதான அவர் 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நன்கொடையாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது.

    ரிலையன்ஸ் அறக்கட்டளை ரூ.407 கோடி நன்கொடையுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஜாஜ் குழும அறக்கட்டளை 352 கோடி ரூபாய் நன்கொடையுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது.

    முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் CSR நன்கொடையில் ரூ.900 கோடி பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து நவீன் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் ரூ. 228 கோடி நன்கொடையுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.

    இன்ஃபோசிஸின் இணை நிறுவனரும், நந்தன் நிலேகனியின் மனைவியுமான ரோகினி நிலேகனி, ஆண்டுக்கு 154 கோடி ரூபாய் நன்கொடையுடன் அதிக நன்கொடைகள் அளித்த பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

    Next Story
    ×