search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேகாலயா சட்டசபை தேர்தல் - தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி
    X

    பிரதமர் மோடி

    மேகாலயா சட்டசபை தேர்தல் - தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி

    • மேகாலயாவில் மொத்தம் 60 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படுகிறது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன.

    இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் தகுதியுடைய வாக்காளர்களை சென்றடைவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், தகுதியுடைய ஒவ்வொரு வாக்காளரும் எளிதாக வாக்களிக்க முடியும் என்பதை உறுதிசெய்ய இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட மகத்தான முயற்சிக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.

    இந்த அணியில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். இது வாக்காளர்களை சாதனை எண்ணிக்கையில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×